உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இறைச்சி விற்பனைக்கு தடை விதித்த பாலிதானா! | Palitana | Ban non-vegetarian | First city in the world

இறைச்சி விற்பனைக்கு தடை விதித்த பாலிதானா! | Palitana | Ban non-vegetarian | First city in the world

உலகின் முதல் சைவ நகரம் எங்கு உள்ளது தெரியுமா? குஜராத் மாநிலம் பாவ் நகர் மாவட்டத்தில் சத்ருஞ்சய மலையை சுற்றி அமைந்துள்ளது பாலிதானா நகரம். ஜெயின் மக்களின் முக்கிய புனித யாத்திரை தலமாக விளங்குகிறது. இந்த ஊரில் 800க்கும் மேற்பட்ட ஜெயின் கோயில்கள் உள்ளன. அதில் ஆதிநாத் கோயில் மிகவும் புகழ்பெற்றது. ஜெயின் மக்கள் அசைவ உணவுகளை உண்பதில்லை. நிலத்துக்கு அடியில் விளையும் கிழங்குகளை கூட அவர்கள் தவிர்க்கிறார்கள். இதனால் தங்களது புனித நகரில் உள்ள 250க்கும் மேற்பட்ட இறைச்சிகடைகளை மூடக்கோரி ஜெயின் துறவிகள் தொடர்ச்சியான போராட்டம் நடத்தி வந்தனர். இதன் பலனாக தற்போது இறைச்சி கடைகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. முட்டை கூட அங்கு விற்கப்பட மாட்டாது. இதையடுத்து அசைவ உணவை தடை செய்த உலகின் முதல் நகரம் என்ற பெருமை பாலிதானாவுக்கு கிடைத்துள்ளது.

ஜூலை 15, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !