உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தமிழகத்தை தாக்கும் புயல்-வெதர்மேன் அதிர்ச்சி தகவல் | northeast monsoon | chennai rain | Pradeep John

தமிழகத்தை தாக்கும் புயல்-வெதர்மேன் அதிர்ச்சி தகவல் | northeast monsoon | chennai rain | Pradeep John

நாளை துவங்குகிறது வடகிழக்கு ஆனால் இன்றே ஆட்டம் ஆரம்பம்! முதல் அடியே புயல் தான்? தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முடிவுக்கு வருகிறது வடகிழக்கு பருவமழை துவங்குவதன் அறிகுறியாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்த மழை தொடரும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காணப்படுகிறது. இதன் காரணமாக தெற்கு வங்கக்கடலின் மையப்பகுதியில் இன்று புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகலாம். இந்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து மேற்கு வடமேற்கு திசையில் தமிழக வடக்கு பகுதி புதுச்சேரி தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை நோக்கி அடுத்த 48 மணி நேரத்தில் நகரக்கூடும். தென்மேற்கு பருவக்காற்று பல்வேறு மாவட்டங்களில் இரண்டு நாட்களில் முழுமையாக விலகும். வங்கக்கடல் அரபிக்கடல் பகுதிகளில் ஒரே சமயத்தில் நிலவும் வளிமண்டல சுழற்சிகள் அவற்றுக்குள் ஏற்படும் பரிமாற்றம் காரணமாக வடகிழக்கு பருவமழை துவங்க சாதகமான சூழல் நிலவுகிறது.

அக் 14, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை