உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வானிலை மையம் கொடுத்த முக்கிய அப்டேட் | Northeast monsoon | Intensifies | IMD | Forecast | November

வானிலை மையம் கொடுத்த முக்கிய அப்டேட் | Northeast monsoon | Intensifies | IMD | Forecast | November

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக மழை பெய்கிறது. பருவமழையோடு சென்னை சமீபத்தில் ஒரு புயலையும் சந்தித்தது. புயல் கரையை கடக்கும்போது அதிக மழை பெய்யும் என நினைத்து சென்னை வேளச்சேரி மக்கள் கார்களை மேம்பாலத்தில் நிறுத்திய சம்பவமும் நடந்தது. நல்லவேளையாக அதிக மழை பெய்யவில்லை. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்திருக்கிறது. நவம்பர் 2வது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடையும் என இந்திய வானிலை மைய இயக்குநர் மொஹபத்ரா கூறியுள்ளார்.

நவ 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி