உலகின் நம்பர் 1 செஸ் வீரரை தோற்கடித்தார் குகேஷ் | Norway Chess 2025 | Magnus Carlsen | Gukesh
குகேஷிடம் தோல்வி! கடுப்பில் மேஜையில் குத்திய கார்ல்சன் நார்வே கிளாசிக்கல் சர்வதேச செஸ் போட்டி ஸ்டாவஞ்சர் நகரில் நடந்து வருகிறது. இந்தியா சார்பில் உலக சாம்பியன் குகேஷ் மற்றும் அர்ஜூன் எரிகைசி விளையாடுகின்றனர். நார்வேவை சேர்ந்த 5 முறை உலக சாம்பியனான மாக்னஸ் கார்ல்சனும் களமிறங்கி உள்ளார். நேற்று நடந்த போட்டியில் குகேஷ், கார்ல்சனை எதிர்த்து ஆடினார். வெள்ளை நிற காயுடன் ஆட்டத்தை தொடங்கிய குகேஷை விட பெரும்பாலான சமயங்களில் கார்ல்சனே ஆதிக்கம் செலுத்தினார். கடைசி வரை டஃப் கொடுத்த குகேஷ் வெற்றி பெற்று, கார்ல்சனுக்கு அதிர்ச்சியை கொடுத்தார். ஏமாற்றம் அடைந்த கார்ல்சன் மேஜையை ஓங்கி அடித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். பின் மன்னிப்பு கேட்ட கார்ல்சன், முகேஷை முதுகில் தட்டி பாராட்டி சென்றார். இது கார்ல்சனுக்கு எதிராக குகேஷின் முதல் வெற்றி. முதல் சுற்றில் கார்ல்சனிடம் கருப்புக் காய்களுடன் விளையாடி குகேஷ் தோல்வியடைந்திருந்தார். புள்ளிகள் பட்டியலில் குகேஷ் 8.5 புள்ளிகளுடன் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். கார்ல்சன் மற்றும் அமெரிக்காவின் பேபினோ கரானாவை விட ஒரு புள்ளிகள் மட்டுமே பின் தங்கியுள்ளார். கார்ல்சனின் சொந்த மண்ணில், குகேஷ் பெற்றுள்ள வெற்றிக்கு பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.