உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / எடப்பாடி பழனிசாமி உறவினர் கம்பெனியில் சிக்கியது என்ன? NR construction company tax evasion IT raid 2

எடப்பாடி பழனிசாமி உறவினர் கம்பெனியில் சிக்கியது என்ன? NR construction company tax evasion IT raid 2

ஈரோடு செட்டிபாளையம் தெற்கு ஸ்டேட் பேங்க் நகரில் என்ஆர் கன்ஸ்ட்ரக் ஷன் எனும் கட்டுமான நிறுவனம் உள்ளது. இந்நிறுவனத்தின் தலைவர் என்.ராமலிங்கம். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் உறவினர். ஈரோட்டை தலைமை இடமாக கொண்டு செயல்படும் என்ஆர் கன்ஸ்ட்ரக்க்ஷன் நிறுவனம் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களிலும் அரசு மற்றும் தனியாருக்காக பல கட்டுமான பணிகளை செய்து வருகிறது. சென்னை, கோவை, மதுரை பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் என்ஆர் நிறுவனத்தின் அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்கள் செயல்படுகின்றன. என்ஆர் கட்டுமான நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக வருமான வரித்துறைக்கு புகார்கள் வந்தன. அதனடிப்படையில், வருமான வரி அதிகாரிகள் கடந்த 7 ம்தேதி தமிழகம் முழுவதும் 26 இடங்களில் ஒரே நேரத்தில் அதிரடி சோதனையை துவங்கினர். ஈரோட்டில் உள்ள தலைமை அலுவலகம், ராமலிங்கத்தின் வீடு ஆகியவற்றிலும் சோதனை நடத்தப்பட்டது. சென்னையில் மட்டும் 6 இடங்களில் சோதனை நடந்தது. என்ஆர் நிறுவனத்துக்கு சொந்தமான 26 இடங்களில் தொடர்ச்சியாக 5 நாட்களுக்கு சோதனை நடந்தது. நேற்று இரவில் ரெய்டு முடிவுக்கு வந்ததாக, வருமான வரித்துறை அறிவித்தது. 5 நாள் ரெய்டு தொடர்பாக சில விவரங்களை வருமான வரித்துறை வெளியிட்டுள்ளது.

ஜன 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி