உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நீங்க சொன்னதை கேட்பது தப்பா? ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி Nutritious meal employees

நீங்க சொன்னதை கேட்பது தப்பா? ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி Nutritious meal employees

சட்டசபை தேர்தல் நெருங்கும் நேரத்தில் பழைய ஓய்வூதியம் கேட்டு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை துவங்கப்போவதாக அறிவித்திருந்தனர். அதற்கு முன் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை அறிவித்து போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தது திமுக அரசு. ஆனால், திமுக தேர்தல் வாக்குறுதி அளித்தபடி, சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு இடைநிலை ஆசிரியர்களும், பணிநிரந்தரம் கேட்டு பகுதிநேர ஆசிரியர்களும் தொடர்ந்து போராடி வருகின்றனர். இவர்கள் தவிர, சத்துணவு ஊழியர்கள் காலமுறை ஊதியம் கேட்டு பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அவர்களை சமாதானப்படுத்த சமூக நலத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் சத்துணவு ஊழியர் சங்க நிர்வாகிகளுடன் இன்று கோட்டையில் பேச்சு வார்த்தை நடத்தினார். சத்துணவு ஊழியர்களின் காலமுறை ஊதியம் கோரிக்கையை அரசு ஏற்கவில்லை. இதனால் எந்த உடன்பாடும் எட்டப்படாமல் பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. அதைத் தொடர்ந்து, 2021 தேர்தலில் திமுக வாக்குறுதி அளித்தபடி சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஓய்வூதியம் வழங்கக் கோரி நாளை முதல் தமிழகம் முழுவதும் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடப்போவதாக சத்துணவுத் திட்ட ஊழியர்கள் அறிவித்தனர். #NutritiousMeals #EmployeeProtest #TamilNaduGovernment #FamilyPension #SalaryHike #JayashreeMuralidharan #IAS #SocialJustice #WorkersRights #PublicSector #GovernmentEmployees #ProtestForChange #NutritionAwareness #EconomicJustice #TamilNadu #SupportEmployees #PensionReform

ஜன 19, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை