உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / காங்., பிஜூ ஜனதா தளம் எம்எல்ஏக்கள் திடீர் ஆவேசம் | Odisha assembly | Huge ruckus | Opposition partie

காங்., பிஜூ ஜனதா தளம் எம்எல்ஏக்கள் திடீர் ஆவேசம் | Odisha assembly | Huge ruckus | Opposition partie

ஒடிசா சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் கட்ட அமர்வு ஜுலை 31 உடன் முடிந்தது. 2ம் கட்டமாக கடந்த 20ம் தேதி முதல் மீண்டும் கூட்டத்தொடர் நடக்கிறது. கூட்டம் தொடங்கிய நாள் முதலே காங்கிரஸ் மற்றும் பிஜு ஜனதா தளம் ஆகிய எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சனைகளை எழுப்பி அமளி செய்து வருகின்றனர். ஒடிசாவின் கஞ்சம் மாவட்டம் சிக்கிடி பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து, 2 பேர் இறந்தனர். மேலும் 13 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். இந்த கள்ளச்சாராய விவகாரம் தான் ஒடிசா சட்டசபையை ரணகளமாக்கி வருகிறது.

ஆக 23, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி