/ தினமலர் டிவி
/ பொது
/ கோடிக்கணக்கில் கொள்ளையடித்த கும்பலை பொறி வைத்து பிடித்த ஒடிசா போலீஸ்! Gang robbers arrested | 3.
கோடிக்கணக்கில் கொள்ளையடித்த கும்பலை பொறி வைத்து பிடித்த ஒடிசா போலீஸ்! Gang robbers arrested | 3.
ஒடிசாவின் கலஹண்டி மாவட்டத்தில் தர்மகர் என்ற இடத்தில் மது உற்பத்தி ஆலை உள்ளது. கடந்த ஜனவரி 30ம் தேதி இரவு அங்கு புகுந்த கொள்ளையர்கள் 3.51 கோடி ரூபாய் பணத்தை கொள்ளை அடித்துச் சென்றனர். இந்த சம்பவத்தில் போலீசாரின் ரோந்து பணியின் போது, 2 பேர் மட்டும் முதலில் சிக்கினர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து வந்து பணத்தை கொள்ளை அடித்துச் சென்றதை ஒப்புக் கொண்டனர். அவர்கள் மூலமாக ஜார்கண்ட் மாநிலத்தில் பதுங்கி இருந்த மற்ற 6 குற்றவாளிகளையும் ஒடிசா போலீசார் பொறி வைத்து பிடித்தனர்.
பிப் 02, 2025