உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பஹல்காம் தாக்குதலில் பலியானோர் குடும்பத்திற்கு இழப்பீடு அறிவிப்பு |

பஹல்காம் தாக்குதலில் பலியானோர் குடும்பத்திற்கு இழப்பீடு அறிவிப்பு |

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் நேற்று நடந்த பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 28 பேர் இறந்தனர். படுகாயங்களுடன் பலர் மீட்கப்பட்டனர். பஹல்காமில் ராணுவம் குவிக்கப்பட்டு, காயமடைந்தோர் பத்திரமாக மீட்கப்பட்டனர். பிற சுற்றுலா பயணிகளும் உடனடியாக ஸ்ரீநகருக்கு அழைத்து வரப்பட்டனர். இறந்தவர்கள் உடலுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அஞ்சலி செலுத்தி, அவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். பயங்கரவாத தாக்குதல் நடந்த இடத்திற்கு சென்று ஆய்வு செய்தார். தாக்குதலில் பலியானோர் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவதாக ஜம்மு - காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா அறிவித்துள்ளார்.

ஏப் 23, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ