₹2 கோடியுடன் சென்னையில் சிக்கிய தில்லாலங்கடி கும்பல் | Omni Bus Money Seized | Arambakkam police
தமிழக ஆந்திர எல்லையில் உள்ள எளாவூர் சோதனை சாவடியில் ஆரம்பாக்கம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். இன்று மதியம் ஹைதராபாத்தில் இருந்து சென்னை வந்த ஆம்னி பஸ்சில் குட்கா தொடர்பான சோதனை நடத்தப்பட்டது. உள்ளே இருந்த அட்டை பெட்டியை திறந்து பார்த்த போலீசார் ஷாக் ஆகினர். கட்டுக்கட்டாய் 500 ரூபாய் நோட்டுகள் இருந்தது. டிரைவரிடம் விசாரித்தனர். ஹைதராபாத்தில் பகத்ராம் என்பவர் இந்த பார்சலை கொடுத்தார். பார்சலில் பொம்மைகள் இருப்பதாகவும், மாதவரத்தில் சூரஜ் பூரி பார்சலை வாங்கி கொள்வார் என அவர் கூறினார். அதில் பணம் இருப்பது எனக்கு தெரியாது. பார்சலை சேர்க்க 500 பணம் கொடுத்தார் என டிரைவர் வாக்கு மூலம் கொடுத்தார். அட்டைப்பெட்டியில் இருந்த முகவரி மற்றும் மொபைல் நம்பரை வைத்து சூரஜ் பூரியை போலீசார் தொடர்பு கொண்டனர். பஸ் பழுதாகி பாதி வழியில் நிற்கிறது. பார்சலை கும்மிடிப்பூண்டி வந்து வாங்கிகோங்க என டிரைவரை பேச சொல்லி லொகேஷனை அனுப்பினர். பார்சலை பெற ஓடோடி வந்த சூரஜ் பூரியை போலீசார் மடக்கி பிடித்தனர்.