ஒரே நாடு ஒரே தேர்தல் பொருளாதார ரீதியில் நல்ல முடிவு | TS Krishnamurthy | Former CEO | Election Commi
முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் தொடர்பாக தனது கருத்துகளை பகிர்ந்துள்ளார். டில்லியில் தேர்தல் கமிஷனராக தான் இருந்தபோது, மன்மோகன் சிங் என்னை பார்க்க கட்சியினர் சிலருடன் வந்தார்; அவ்வளவு எளிமையானவர். தனக்கென பதவி உள்ளது என்பதை எப்போதும் காட்டிக் கொள்ள மாட்டார். அவரிடம் ஆவணங்களில் கையெழுத்து வாங்கும்போது எழுந்து நின்றபடி தான் கையெழுத்திடுவார். சிலரின் செயல்கள் பிடிக்கவில்லை எனில் நேரடியாக சொல்லி விடுவார். சிபாரிசு போன்ற விஷயங்களில் தலையிடுவது கிடையாது. 1991ல் பொருளாதாரத்தில் பின்தங்கியிருந்த நம் நாட்டை மீட்க, புதுப்பது வழிகளை கடைப்பிடித்தார். இதனால், உலகளவில் இந்தியாவின் தோற்றம் நன்றாக வளர்ந்தது. தேர்தல் கமிஷனரால் தனிப்பட்ட முறையில், எந்த முடிவும் எடுக்க முடியாது. ஆனால், சில கட்சிகளை மட்டும் தேர்தல் கமிஷன் கண்டுகொள்வதில்லை என்பது போல பேசுகின்றனர். ஒரே நாடு; ஒரே தேர்தல் திட்டத்தை, தமிழகம் எதிர்க்கிறது என சொல்லி விட முடியாது. இங்குள்ள சிலர் வரவேற்றும் உள்ளனர். காலப்போக்கில் இந்த விவகாரம் அரசியலாக்கப்பட்டு விட்டது. அரசியலமைப்பு சட்டத்தை மாற்றினால், இதை சாத்தியப்படுத்த முடியும்; எனவே மாற்ற வேண்டும். தனியாக ஒருபோதும் நடைமுறைப்படுத்த முடியாது; அரசியல் தான் முடிவு செய்ய வேண்டும். நிர்வாக, பொருளாதார ரீதியாக பார்த்தால், இது நல்ல முடிவு. நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஏழு முதல் எட்டு தேர்தலாவது நடக்கிறது. இது தேர்தல் கமிஷனுக்கு சவால்களை தருகிறது. அரசு மற்றும் கட்சிகளுக்கும் கூட இது சவால் தான். தேர்தல் வந்து விட்டால், கட்சிகள் ஒரு பக்கம் செலவு செய்ய வேண்டும். பிரசாரத்தில் வன்முறையும் ஏற்படுகிறது. அதை மாற்ற ஒரே நாடு; ஒரே தேர்தல் நல்ல வழி.