ெமி கண்டக்டர், சிப் வடிவமைப்பில் முன்னணியில் தமிழகம்! One nation one GST | TaxReform | Semiconductor
ஒரே நாடு; ஒரே வரி; ஒரே சந்தை என்ற இலக்குடன் 2017ல் அறிமுகப்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி அமைப்பில், மேலும் ஒரு முக்கிய சீர்திருத்தத்தை மேற்கொள்ள மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. தற்போது பல மாநிலங்களில் தொழில் நடத்தும் நிறுவனங்கள், ஒவ்வொரு மாநிலத்திலும் தனித்தனியாக ஜி.எஸ்.டி. பதிவு பெற வேண்டியது கட்டாயமாக உள்ளது. இதை மாற்றி, நாடு முழுவதற்கும் பான் எனப்படும் நிரந்தர கணக்கு எண் அடிப்படையிலான ஒரே ஜி.எஸ்.டி. பதிவை அறிமுகப்படுத்த கவுபா குழு பரிந்துரைத்து உள்ளது. இந்த பரிந்துரை, நடப்பு நிதியாண்டிலேயே அமல்படுத்தக்கூடிய சீர்திருத்தங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளதுடன், மத்திய அரசின் பரிசீலனையிலும் உள்ளது. தற்போதைய முறையில், ஒரு நிறுவனம் பல மாநிலங்களில் செயல்பட்டால், ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனித்தனி ஜி.எஸ்.டி. பதிவு மற்றும் தனித்தனி வரி அறிக்கைகளை தாக்கல் செய்ய வேண்டியுள்ளது. இதனால் செலவுகளும் நிர்வாக சுமைகளும் அதிகம். #OneNationOneGST #TaxReform #Semiconductor #Chip #Tamilnadu #GST #Indiaseconomy #TechInnovation #ChipsIndustry #MakeInIndia #Manufacturing #DigitalIndia #EconomicGrowth #SmartIndia #InvestmentOpportunities #FutureTech #EducationAndInnovation #JoinTheMovement #TechInTamilnadu