/ தினமலர் டிவி
/ பொது
/ எதிர்கட்சிகளிடம் கருத்து கேட்ட பின்பே மசோதா தாக்கல் |one nation |one poll|bill| Lok Sabha| Arjun Ra
எதிர்கட்சிகளிடம் கருத்து கேட்ட பின்பே மசோதா தாக்கல் |one nation |one poll|bill| Lok Sabha| Arjun Ra
பார்லிமென்ட் தேர்தலுடன், மாநில சட்ட சபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு வழிவகை செய்யும், அரசியல் அமைப்பு திருத்த மசோதா 2024 மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான சட்டத்தில் திருத்தம் கொண்டுவரும் மசோதா 2024 ஆகியவற்றை, சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் இன்று லோக் சபாவில் தாக்கல் செய்ய முன்வந்தார். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எதிர்த்தனர். மசோதாக்களை தாக்கல் செய்ய வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அப்படியே நடத்தி மசோதாக்களை தாக்கல் செய்தாலும், அதை பார்லிமென்ட் கூட்டுக் குழு விசாரிக்க உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினர்.
டிச 17, 2024