பார்சல் இறக்கிய சுமைதூக்கும் தொழிலாளர் 5 பேர் படுகாயம்
ஆந்திராவின் காக்கிநாடா மாவட்டத்தில் பாலாஜி டிரான்ஸ்போர்ட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்திறகு ஐதராபாத்தில் இருந்து 4 மூட்டை பார்சல்கள் அனுப்பப்பட்டு இருந்தன. லாரியில் கொண்டு வரப்பட்ட பார்சல்களை சுமைதூக்கும் தொழிலாளர்கள் இறங்கி கொண்டு இருந்தனர். ஐதராபாத் பார்சலை தொழிலாளி இறக்கி தரையில் போட்டதும் அது பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மார் 03, 2025