ஆட்டோ, டாக்ஸிகள் ஓடவில்லை வெறிச்சோடிய தெருக்கள் | Ooty | Nilgiris Bandh
நீலகிரி மாவட்டத்திற்கு வரும்டூரிஸ்ட் வாகனங்களுக்கு இ-பாஸ் மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. வாகன நெரிசல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருத இந்த நடைமுறையை ஐகோர்ட் அறிவித்தது. வார நாட்களில் 6000 வாகனங்களும், வார இறுதி நாட்களில் 8000 வாகனங்கள் மட்டும் ஊட்டிக்கு அனுமதிக்கப்படும். இந்த கட்டுப்பாடுகளுக்கு நீலகிரி மாவட்ட வணிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த கட்டுப்பாடுகளால் சுற்றுலாப்பயணிகள் வருகை குறைந்து வியாபாரம், தொழில் பாதிக்கப்படுவதாக கூறுகின்றனர். இ-பாஸ் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை நீக்க வலியுறுத்தி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் இன்று ஒருநாள் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
ஏப் 02, 2025