ஊட்டியில் துண்டு துண்டாக பிளந்த வீடுகள்-அதிர்ச்சி ooty landslide |nilgiris rain|wayanad landslide
நீலகிரி மலைபகுதியில் கடந்த 25ம் தேதி கனமழை ஆரம்பித்தது. 6 நாட்களாக தொடர்ந்து கொட்டித்தீர்க்கிறது. அதிகபட்சமாக அவலாஞ்சி ஏரியாவில் 5 நாளில் 1300 மிமீ மழை பதிவாகி இருக்கிறது. ஊட்டி பகுதியும் கனமழைக்கு தப்பவில்லை. தொடர் மழை காரணமாக பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. ஊட்டியின் குருத்துக்குளி பசுவக்கல் என்ற இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதில் 5 வீடுகள் சேதம் அடைந்தன. பூகம்பம் வந்தால் வீடு, நிலம் இரண்டாக பிளப்பது போல் வீடுகள் துண்டு துண்டாக வெடித்தன. குறிப்பாக, தோட்டத்தில் கட்டிய பிரமாண்ட வீடு ஒன்று பல துண்டுகளாக பிளந்து முற்றிலும் சேதம் அடைந்து விட்டது. நிலச்சரிவு அபாயத்தை முன்கூட்டியே உணர்ந்த மக்கள் வீடுகளை காலி செய்து விட்டு, பாதுகாப்பான இடத்தில் வசிக்கும் உறவினர்கள் வீடுகளுக்கு சென்று இரவில் தங்கினர். விடிந்ததும் தங்கள் வீட்டை வந்து பார்த்த போது இடிந்து போனார்கள். அந்தரத்தில் தொங்கிய வீடுகளை பார்த்து கண்ணீர் விட்டு கதறினர். பாதிக்கப்பட்ட மக்களை பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள் மீட்டு, முகாம்களில் தங்க வைத்தனர். வீடுகள் சேதம் குறித்து கணக்கெடுத்தனர். அதே போல் சேதம் அடைந்த வீடுகள் குடியிருப்பு ஏரியாவை விட மேடான இடத்தில் இருக்கின்றன. கனமழை தொடர்ந்து பெய்தால், அந்த இடத்தில் பெரிய நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருக்கிறது. இதனால் பாதிக்கப்பட் இடத்துக்கு கீழே இருக்கும் குடியிருப்பும் கடும் சேதத்தை சந்திக்கும் அபாயம் இருக்கிறது. இதனால் அந்த பகுதியை தொடர்ந்து பேரிடர் மீட்பு படையினர் கண்காணித்து வருகின்றனர். இதே ஊட்டியின் மறுபக்கம் கேரளாவில் இருக்கும் வயநாட்டில் கடந்த ஆண்டு நடந்த நிலச்சரிவை யாராலும் மறக்க முடியாது. பல உயிர்களை காவு வாங்கியது.