மோடி வருகை இதற்கு தான்-சுதாகர் ரெட்டி OPEN TALK | Modi TN visit | bihar election result nda vs dmk
பிரதமர் மோடியின் கோவை வருகை பற்றி, தமிழக பாஜ மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறியது: பீகாரில் என்டிஏ கூட்டணி இமாலய வெற்றி பெற்ற கையோடு, பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். 2026ல் இது தான் தமிழகத்திலும் நடக்கும். அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையிலான என்டிஏ கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும். மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரியிலும் என்டிஏ கூட்டணி தான் வெற்றி பெறும். தமிழகத்தில் திமுக அதிகார துஷ்பிரயோகம் செய்வதோடு, மக்கள் விரோத மற்றும் விவசாயிகள் விரோத ஆட்சியை நடத்தி வருகிறது. இந்த அரசு ஊழலில் ஊறி திளைக்கிறது. சட்டம் ஒழுங்கை காப்பாற்ற முடியவில்லை. மணல் மாஃபியா, போதை மாஃபியாக்கள் பெருகி விட்டனர். நானே நேரடியாக விவசாயிகளை பார்க்க தஞ்சாவூர் சென்றிருந்தேன். திமுக ஆட்சி நடத்தும் விதத்தை விவசாயிகள் என்னிடம் சொன்னார்கள். விவசாயிகள் விரோத திட்டங்களை தான் திமுக கொண்டு வருகிறது. வேளாண்மை செழிக்க எந்த திட்டத்தையும் அமல்படுத்தவில்லை என்றார்கள். ஆனால் பிரதமர் மோடியோ நாடு முழுதும் விவசாயிகள் நலனே முக்கியம் என்று இருக்கிறார். விவசாயிகளுக்கு ஆதரவாகவும் இளைஞர்களுக்கு ஆதரவாகவும் பல திட்டங்களை கொண்டு வருகிறார். உலகிலேயே 4வது சக்தி வாய்ந்த பொருளாதார நாடாக இந்தியா விளங்குகிறது. சீக்கிரமே மூன்றாவது இடத்துக்கு போக இருக்கிறோம். பாஜ ஆட்சிக்கு எதிராக காங்கிஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஆர்ஜேடி என்ன தான் பொய் பிரசாரம் செய்தாலும், உண்மை நிலை என்ன என்பதை மக்கள் நன்றாக அறிந்து இருக்கிறார்கள்.