உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இறக்குமதி மணல் திட்டம் என்னாச்சு? | Opening of 8 new sand Quarries | TamilNadu Government Action

இறக்குமதி மணல் திட்டம் என்னாச்சு? | Opening of 8 new sand Quarries | TamilNadu Government Action

தமிழகத்தில் 12 இடங் களில் ஆற்று மணல் குவாரி கள் செயல்பட்டு வந்தன. குவாரியில் இருந்து யார்டு பகுதிக்கு மணல் அள்ளி போடும் ஒப்பந்ததாரர்கள் முறைகேடு செய்வதாக புகார் எழுந்தது. அவர்கள் சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டது தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டது. இதனால், குவாரிகள் மூடப்பட்டன. இதையடுத்து 30க்கும் மேற்பட்ட இடங்களில் மணல் குவாரிகள் திறக்க நீர்வளத்துறை நடவடிக்கை எடுத்தது. சுற்றுச்சூழல் அனுமதி உள்ளிட்ட பணிகள் முடிந்த நிலையில் ஒப்பந்ததாரர்களை தேர்வு செய்வதில் பிரச்னை ஏற்பட்டது. இதனால் புதிய குவாரிகள் திறப்பு நடவடிக்கை பாதியில் முடங்கியது. ஏற்கனவே சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்ட எட்டு இடங்களில் புதிதாக மணல் குவாரிகளை திறக்க அரசு முடிவு செய்துள்ளது. புதுக்கோட்டையில் 3, கடலுாரில் 2, தஞ்சாவூர், நாமக்கல், ராணிப்பேட்டை மாவட்டங்களில் தலா ஒன்று என மொத்தம் எட்டு இடங்களில் மணல் குவாரிகள் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நவம்பர் 1 முதல் மணல் விற்பனை துவங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து அனைத்து எம்.சாண்ட் மற்றும் மணல் லாரி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் யுவராஜ் கூறுகையில், மணல் குவாரிகள் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்கு கடந்த வாரம் முடிவுக்கு வந்தது. தொடர்ந்து புதிய குவாரிகள் திறக்க முறையிட்டோம். அதன் அடிப்படையில் மணல் குவாரிகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, என்றார். தமிழகத்திற்கு 2017 ம் ஆண்டு முதல் முறையாக இறக்குமதி செய்யப்பட்ட 54 ஆயிரம் டன் ஆற்று மணல் கனிம வளத்துறையின் ஆட்சேபத்தால் துாத்துக்குடி துறைமுகத்தில் முடங்கியது. இதனால் மணல் தட்டுப்பாட்டை சமாளிக்க தனியார் நிறுவனம் எடுத்த முயற்சிக்கு அப்போது முட்டுக்கட்டை ஏற்பட்டது. தமிழகத்தில் கட்டுமான பணிக்கான ஆற்று மணல் கிடைப்பதில் எப்போதும் இல்லாத வகையில் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. சுற்றுச்சூழல் அனுமதி சிக்கலால் பெரும்பாலான குவாரிகள் மூடப்பட்டு உள்ளன. அவற்றை மீண்டும் திறக்கவும். மேலும் புதிதாக 8 குவாரிகளை திறக்கவும் அரசு நடவடிக்கை எடுதுள்ளது. அரசின் இம்முயற்சிக்கு புதிய வீடு கட்டுவோர், மணல் குவாரி ஒப்பந்ததாரர்கள் மற்றும் கட்டுமான தொழிலில் ஈடுபடுவோர் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது. எனினும் தமிழகத்தில் மணல் சந்தையில் மணல் தட்டுப்பாடு ஏற்பட்டு கட்டுமான பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நிலைமையை சமாளிக்க மியான்மர், கம்போடியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளில் இருந்து ஆற்று மணலை இறக்குமதி செய்ய சில நிறுவனங்கள் திட்டமிட்டன. முதல் முயற்சியாக புதுக்கோட்டையை சேர்ந்த எம்.ஆர்.எம்.ராமையா என்டர்பிரைஸ் லிமிடெட் என்ற நிறுவனம் முன்பு கம்போடியாவில் இருந்து 55 ஆயிரத்து 445 டன் மணலை இறக்குமதி செய்தது. சில ஆண்டுகளுக்கு முன் இந்த மணல் மலேஷியா வழியாக அன்னா டோரோதியா என்ற கப்பலில் சில துாத்துக்குடி துறைமுகத்தில் இறக்குமதியானது; இவற்றின் மதிப்பு எட்டு கோடி ரூபாய். இதற்கு சுங்க வரியாக, 16 லட்சம் ரூபாய் செலுத்தப்பட்டதாக தெரிகிறது. இந்த மணல் லோடு, 30 ஆயிரம் ரூபாய் விலையில், நெல்லை, கன்னியா குமரி மாவட்டங்கள் மற்றும் கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள கட்டுமான நிறுவனங்களுக்கு வழங்க பட இருந்தது. முதற்கட்டமாக 57 லாரிகளில் இறக்குமதி மணல் திருவனந்தபுரத்துக்கு அனுப்பப்பட்டது. தமிழக எல்லையில் வருவாய் துறை அதிகாரிகள் லாரிகளை சோதனை செய்த போது குவாரிகளில் வழங்கப்படும் கனிம வளத்துறை அனுமதி சீட்டு இல்லாததால் சில லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இறக்குமதி மணலை லாரிகளில் எடுத்து செல்ல அனுமதிக்க வேண்டாம் என வருவாய் மற்றும் கனிம வளத்துறை அதிகாரிகள் துறைமுக நிர்வாகத்துக்கு தெரிவித்தனர். இதனால் 54 ஆயிரம் டன் மணல் விற்பனை செய்ய முடியாமல் துறைமுக வளாகத்திலேயே முடங்கியது. தனியார் நிறுவனத்துக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. இது குறித்து திருச்சியைச் சேர்ந்த கட்டுமான பொருட்கள் விற்பனை நிர்வாகி முருகன் கூறுகையில், தமிழகத்தில் மணல் தட்டுப்பாடு அதிகரித்து உள்ளது. இதற்கு இறக்குமதி மட்டுமே தீர்வு. மியான்மர், கம்போடியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் இருந்து, மணலை இறக்குமதி செய்யலாம். துாத்துக்குடி மட்டுமின்றி, சென்னை துறைமுகம் வழியாகவும் இறக்கு மதிக்கு அனுமதித்தால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நடக்கும் கட்டுமான பணிகளுக்கு தட்டுப்பாடு இன்றி மணல் கிடைக்கும். இறக்குமதி மணலுக்கு தரச்சான்று கேட்கக்கூடாது என கேரள அரசு அறிவித்துள்ளது. இதே போன்ற அறிவிப்பை, தமிழக அரசும் பிறப்பித்தால் மணல் இறக்குமதி உத்வேகம் பெறும் என கூறினார். விலை குறைந்த மற்றும் தரமான இறக்குமதி மணலுக்கு கனிம வளத்துறை முட்டுக்கட்டை போடாமல் இருந்தால் மட்டுமே மணல் தட்டுப்பாடு நீங்கும். மணல் கொள்ளையால் தமிழக நீர் நிலைகள் வறண்டு போகாமல் சுற்றுச்சூழல் காக்கப்படும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர். #SandQuarry #Opening #8newSandQuarries #TamilNaduGovernment #Action #TamilNadu #SandQuarryTamilNadu #TamilCulture #Environment #Ecology #SustainableDevelopment #Nature #Resources #Mining #SandMining #TamilTradition #CoastalErosion #EcoFriendly #Community #WomenEmpo

அக் 28, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை