மனிதர்களை ருசிக்கும் குரூர ஓநாய் கூட்டம்-பதறும் 60 ஊர் Bahraich man-eater wolves | Operation Bhediya
அந்த பயங்கர மிருக கூட்டம் நைட்ல எப்ப வரும்னே தெரியாது... குழந்தைங்க தான் அதுங்களுக்கு குறி... வந்துச்சுனா குலை நடுங்கும்... அசந்த நேரம் கண்ல பட்ட குழந்தைய, கழுத்த கவ்வி தூக்கிட்டுப்போய்டும்... அந்த கூட்டத்த விரட்டி பிடிக்க முடியாது... கடைசில குழந்தையோட எலும்பு மட்டும் தான் மிஞ்சும்... ஒண்ணு இல்ல ரெண்டு இல்ல... 9 பேர அடிச்சி தின்னு இருக்குங்க அந்த கொடிய மிருகங்க... அதுல 8 பேர் குழந்தைங்க... ஒருத்தர் 45 வயதான பெண்... அடுத்து யார கவ்வி தூக்கிட்டு போகுமோனு உயிர கையில பிடிச்சிட்டு இருக்கோம்...! இப்படி தான் உத்தரப்பிரதேசம் பஹ்ரைச் மாவட்டத்தில் உள்ள 60 கிராம மக்கள், ஒன்றரை மாதமாக உறக்கம் தொலைத்து புலம்பிக் கொண்டு இருக்கின்றனர். அவர்கள் சொன்ன கொடிய விலங்கு புலியோ சிறுத்தையோ இல்லை... அது ஒரு ஓநாய் கூட்டம். அதுவும் மனிதர்களை விரும்பி உண்ணும் ஓநாய் கூட்டம்.