உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பஹல்காம் பயங்கரவாதிகள் பற்றி தகவல் தந்தால் சன்மானம் Lashkar-e-Taiba terrorist| Operation Keller|

பஹல்காம் பயங்கரவாதிகள் பற்றி தகவல் தந்தால் சன்மானம் Lashkar-e-Taiba terrorist| Operation Keller|

தெற்கு காஷ்மீரின் ஷூகல் கெல்லர் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. ராணுவத்தினர் ஆபரேஷன் கெல்லர் வேட்டையில் இறங்கினர். அடர்ந்த வனப்பகுதியில் போலீசார், ராணுவத்தினர் தேடுதலில் ஈடுபட்டு இருந்தபோது, பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். நமது வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினர். சிறிது நேரம் நீடித்த இந்த துப்பாக்கி சண்டையில் லஷ்கரே தொய்பா பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானில் இருந்த பயங்கரவாதிகள் முகாம்களை அழித்தது. தாக்குதல் நிறுத்தப்பட்டாலும், ஆபரேஷன் சிந்தூர் முடியவில்லை. எல்லை தாண்டும் பயங்கரவாதிகளுக்கு தகுந்த பதிலடி தரப்படும் என்று பிரதமர் மோடி எச்சரித்து இருந்த நிலையில் இச்சம்பவம் நடந்துள்ளது. இதனிடையே, பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் தேடப்பட்டு வருகின்றனர். தெற்கு காஷ்மீர் முழுவதும் பயங்கரவாதிககள் 3 பேர் போட்டோவுடன் கூடிய போஸ்டர்களை போலீசார் ஒட்டி உள்ளனர். அவர்கள் பற்றி தகவல் அளித்தால் 20 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என காஷ்மீர் போலீசார் அறிவித்துள்ளனர். தகவல் தெரிவிப்போரின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். இந்த பயங்கரவாதிகள் மூவரும் பாகிஸ்தானியர்கள் என்றும் அவர்கள் ஆசிப், சுலேமான் ஷா, அபு தல்ஹா என்றும் என்ஐஏ அறிவித்து இருக்கிறது.

மே 13, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி