பாகிஸ்தானின் அறுவறுப்பான பயங்கரவாத விளையாட்டு: ராஜ்நாத் சிங் Operation Sindhoor Debate| Rajnat Singh
லோக்சபாவில் ஆபரேஷன் சிந்துார் பற்றிய விவாதத்தில் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் உரையாற்றினார். ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22ல் நடந்த பயங்கரவாத தாக்குதலில் இந்தியர்கள் 25 பேர், நேபாளி ஒருவர் என மொத்தம் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகள் ஒவ்வொருவரின் மதத்தையும் கேட்டு கேட்டு கொலை செய்தனர். இது இந்தியர்களின் உணர்வுகள் மீதான நேரடி தாக்குதல். தொடர்ந்து முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். எங்கு, எப்படி தாக்குதல் நடத்த வேண்டும் என, நம் முப்படைகள் துல்லியமாக திட்டமிட்டன. மே 7ல் பாகிஸ்தான் மற்றும் பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய படைகள் தாக்குதல் நடத்தின. நள்ளிரவு நடந்த தாக்குதலில் பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன.