பாகிஸ்தானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைக்கு முஸ்லிம்கள் பாராட்டு Operation Sindhoor| India - Pak War|
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், ஆபரேஷன் சிந்துார் மூலம் பாக். ராணுவ முகாம்களை நம் பாதுகாப்பு படையினர் தாக்கி அழித்தனர். அதன் பிறகு பாகிஸ்தான் ராணுவம், இந்திய எல்லை மாநிலங்களில் உள்ள பல இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்துகிறது. பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்கள் அனைத்தும் நம் படையினரால் நடு வானில் தாக்கி அழிக்கப்பட்டன. பாகிஸ்தானின் தாக்குதலுக்கு நமது முப்படைகளும் தக்க பதிலடி கொடுக்கின்றன. இந்த நிலையில் நாடு முழுதும் பாகிஸ்தானுக்கு எதிராகவும், நமது ராணுவத்திற்கு ஆதரவாகவும் மக்கள் குரல் எழுப்பி வருகின்றனர். ஏற்கனவே 5.5 லட்சம் மசூதிகளில் பயங்கரவாதம், பாகிஸ்தானுக்கு எதிரான நிலைப்பாடு எடுக்கப்பட்டுள்ளதாக, அகில இந்திய இமாம் கூட்டமைப்பு அறிவித்தது. இப்போது பாகிஸ்தானுக்கு எதிரான சண்டையில், இந்திய ராணுவம் வெற்றி பெற வேண்டி உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் உள்ள மசூதியில், சிறப்பு தொழுகை நடந்தது. ஏராளமான முஸ்லிம்கள் இந்த தொழுகையில் பங்கேற்றனர்.