இந்திய விமானப்படை தளபதி சொன்னதை மறுக்கும் பாகிஸ்தான் | Operation sindoor | IAF | Pakistan aircraft
ஒரு போர் விமானத்தை கூட தாக்கவோ சுடவோ இல்லை மறுக்கும் பாகிஸ்தான் ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22ல் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். நாடு முழுதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்துக்கு பதிலடியாக நமது ராணுவம் மே 7ல் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் தாக்கி அழிக்கப்பட்டன. இதனால் இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட சண்டை 4 நாட்களுக்கு பின் முடிவுக்கு வந்தது. பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது பற்றி அவ்வப்போது புதுப்புது தகவல்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் இந்த சண்டையின்போது பாகிஸ்தானின் 6 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இந்திய விமானப்படை தலைமை தளபதி அமர்பிரித் சிங் புதிய தகவலை கூறினார். ஆனால் இதை பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் மறுத்துள்ளார். இந்திய தரப்பில் இருந்து பாகிஸ்தானின் ஒரு விமானத்தை கூட தாக்கவோ, சுட்டு வீழ்த்தவோ இல்லை. இந்திய விமானப்படை கால தாமதமாக தெரிவித்திருக்கும் தகவல் நம்பும் படியாக இல்லை. உண்மையை தெரிந்துகொள்ள, இரு தரப்பில் இருந்தும் விமானப்படை தளவாடங்களை சுதந்திரமாக ஆய்வு செய்ய அனுமதிப்போம் என்றும் கவாஜா ஆசிப் கூறியுள்ளார்.