இரவோடு இரவாக இந்தியா பயங்கர யுத்தம்-முழு தகவல் india vs pakistan | operation sindoor | ins vikrant
50 ட்ரோன், 8 ஏவுகணை, 3 போர் விமானம் 35 நிமிடத்தில் கதையை முடித்த இந்தியா இரவில் என்ன நடந்தது? முழுமையான பின்னணி இந்தியா, பாகிஸ்தான் மோதலின் தொடர்ச்சியாக இரவோடு இரவாக எல்லையில் மிகப்பெரிய சம்பவம் நடந்து முடிந்து விட்டது. என்ன நடக்கிறது என்பதை மக்கள் முழுமையாக புரிந்து கொள்வதற்கு முன்பு எல்லாவற்றையும் கச்சிதமாக முடித்து விட்டது நம் ராணுவம். உண்மையில் அப்படி என்ன தான் நடந்தது என்பதை முழுமையாக பார்க்கலாம். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க 2 நாள் முன்பு நள்ளிரவில் நம் ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை எடுத்தது. பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் புகுந்து அங்கிருந்த பயங்கரவாதிகளின் தலைமை இடம் உட்பட 9 முகாம்களை குண்டு வீசி தகர்த்தது. இந்த அட்டாக்கில் பயங்கரவாதி மசூத் அசாரின் குடும்பத்தினர் 10 பேர் உட்பட மொத்தம் 100 பேர் கொல்லப்பட்டனர்.