துபாய் ஏர்போர்ட் அருகே அடித்த ஈரான் ட்ரோன்கள்: திடீர் பீதி | Dubai Drone Strike | Operation True Pro
ஈரான் மீதான அமெரிக்கா-இஸ்ரேலின் தாக்குதல் 10 நாட்களுக்கும் மேலாக தொடர்கிறது. பதிலுக்கு ஈரானும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க நிலைகளை குறி வைத்து அடிக்கிறது. சில நாட்களாக பதிலடி தாக்குதலை குறைத்து இருந்த ஈரான் மீண்டும் வளைகுடா நாடுகளில் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. கத்தார், ஈராக்கின், குர்த்திஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைனில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போர் பதற்றங்களுக்கு இடையே இன்று துபாய் சர்வதேச விமான நிலையம் அருகே ஈரானிய ட்ரோன்கள் விழுந்து வெடித்தன. இந்த சம்பவத்தில் ஒரு இந்தியர் உட்பட நான்கு பேர் காயமடைந்துள்ளனர். இது குறித்து துபாய் ஊடக அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஈரான் ட்ரோன் தாக்குதலில் ஒரு இந்தியருக்கு மிதமான காயம் ஏற்பட்டுள்ளது. கானா நாட்டைச் சேர்ந்த இருவர், வங்கதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளன. தாக்குதல் விமான நிலையத்திற்கு மிக அருகில் நடந்தபோதிலும், விமானப் போக்குவரத்துப் பாதிக்கப்படாமல் வழக்கம் போல் இயங்கி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஈரானின் ஆபரேஷன் ட்ரூ ப்ராமிஸ் 4 (Operation True Promise 4) என்ற நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தத் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. இதுவரை சுமார் 1,400க்கும் மேற்பட்ட ட்ரோன்களை ஈரான் ஏவியுள்ளதாகவும், அதில் பெரும்பாலானவை அமீரகத்தின் வான் பாதுகாப்பு அமைப்புகளால் முறியடிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. #Dubai #Iran #MiddleEastCrisis #DubaiAirport #DroneAttack #IndianInDubai #WestAsiaWar #BreakingNews #InternationalSafety #Emirates #DXB #WarUpdates #GlobalSecurity #AviationNews #IndianDiaspora