ஆபரேஷன் சிந்தூர் புதிய வீடியோ; பாகிஸ்தானுக்கு ராணுவம் மெசேஜ் Operation sindoor| indian army shared
ஆபரேஷன் சிந்தூர் புதிய வீடியோ; பாகிஸ்தானுக்கு ராணுவம் மெசேஜ் Operation sindoor| indian army shared fresh visuals| pahalgam attack short breath காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு, பதிலடி தரும் வகையில் நமது ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை எடுத்தது. பாகிஸ்தானில் இருந்த 9 பயங்கரவாதிகள் முகாம்கள் பயிற்சி மையங்கள் குண்டுவீசி அழிக்கப்பட்டன. நூற்றுக்குமேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பான புதிய வீடியோவை இந்திய ராணுவத்தின் மேற்கு பிராந்திய பிரிவு வெளியிட்டு இருக்கிறது. breath திட்டமிடப்பட்டு, பயிற்சி அளிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டது. நீதி நிலைநாட்டப்பட்டது என்ற தலைப்பில் ராணுவம் அந்த வீடியோவை பதிவிட்டு உள்ளது. அதில், பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்களை நமது வீரர்கள் துவம்சம் செய்யும் காட்சி இடம்பெற்றுள்ளது. வீடியோவில் பேசும் ராணுவ வீரர், பஹல்காம் தாக்குதல் காரணமாக இந்த ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டது. இது கோபம் அல்ல; பாடம் புகட்டுவதற்கான தீர்மானம். எதிர்காலத்தில் என்றென்றும் இது நினைவில் கொள்ளப்படும். இது பழிவாங்கும் நடவடிக்கை அல்ல; இது தான் நீதி எனக்கூறியுள்ளார்.