பாக் டிரோன், பயங்கரவாத முகாம்கள் சிதறும் காட்சி | OPERATION SINDOOR | Drone strike
காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை மட்டுமே குறி வைத்து இந்தியா தாக்கி வருகிறது. ஆனால் பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவில் பொதுமக்கள் குடியிருக்கும் பகுதிகளை ஏவுகணைகள், டிரோன்கள் மூலம் தாக்கி வருகிறது. அவற்றை வான் பாதுகாப்பு அமைப்புகள் மூலம் தாக்கி இந்திய ராணுவம் அழித்துள்ளது. தற்போது பயங்கரவாதிகள் முகாம்களை அழித்தது தொடர்பாக புதிய வீடியோ ஒன்றை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மற்றும் பஞ்சாபின் பல நகரங்களில் பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதல் முயற்சிகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய ராணுவம் பயங்கரவாதிகள் முகாம்களை அழித்தது. இந்த முகாம்கள் கடந்த காலங்களில் இந்திய பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு எதிராக பயங்கரவாத தாக்குதல்களை திட்டமிடும் மையமாக இருந்தன. இந்திய ராணுவத்தின் நடவடிக்கை பயங்கரவாதிகளுக்கு பலத்த அடியைக் கொடுத்துள்ளது என வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Breath இதே போல பஞ்சாபில் ஆயுதங்களை சுமந்து கொண்டு வந்த பாகிஸ்தான் டிரோனை சுட்டு வீழ்த்திய காட்சிகளும் இந்திய ராணுவம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது. இந்திய மக்கள் வசிக்கும் பகுதிகளை டிரோன்களை கொண்டு தாக்கும் பாகிஸ்தானின் முயற்சிகள் அனைத்தும் முறியடிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே ஆயுதங்களுடன் பறந்து வந்த பாகிஸ்தானின் டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்திய மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் பாகிஸ்தானின் அப்பட்டமான முயற்சியை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்கும் எதிரிகளின் திட்டங்களை முறியடிப்போம் என ராணுவம் தெரிவித்துள்ளது.