உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / போர் துவங்கிய இந்தியா: பாகிஸ்தானில் அவசர நிலை | OPERATION SINDOOR | PRECISION STRIKE

போர் துவங்கிய இந்தியா: பாகிஸ்தானில் அவசர நிலை | OPERATION SINDOOR | PRECISION STRIKE

காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலுக்கு சரியான பதிலடி கொடுக்க திட்டமிட்டு தழுவிய போர் கால ஒத்திகையை மத்திய அரசு அறிவித்தது. ஆனால் போர் கால ஒத்திகைக்கு முன்பே இந்திய ராணுவம் மே 7 நள்ளிரவில் ஆபரேசன் சிந்தூர் என்ற பெயரில் பயங்கரவாதிகளின் 9 முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதலை துவக்கியது. பொதுவாக போர் ஒத்திகை நடத்தப்பட்டால் அதன்பின் இரண்டு - மூன்று நாட்களில் அல்லது சில நாட்கள் கழித்தே போர் துவங்கும். அதே போன்று ஒத்திகைக்கு பின்பு தான் இந்தியா போரை துவக்கும் என பாகிஸ்தான் நம்பியிருந்தது. இந்த நேரத்தில் இந்திய ராணுவம் மிகவும் சதூர்யமாக பாகிஸ்தானை ஏமாற்றி இரவோடு இரவாக பக்காவாக பிளான் செய்து பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் விமான மூலம் குண்டு வீச்சு தாக்குதலை நடத்தியது. இத்தாக்குதலால் பாகிஸ்தான நிலை குலைந்து போயுள்ளது. இந்திய ராணுவம் தாக்குதலை பாகிஸ்தான் பிரதமர் ஷப்பாஸ் ஷெரீப் உறுதிபடுத்தியுள்ளார்.

மே 07, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி