ஆப்ரேஷன் சிந்தூர்-மனம் தொட்ட மோடி operation sindoor decoding | kashmir pahalgam attack ind vs pak
ஆப்ரேஷன் சிந்தூர்-மனம் தொட்ட மோடி operation sindoor decoding | kashmir pahalgam attack ind vs pak காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா உரிய பதிலடியை கொடுத்துள்ளது. முப்படையும் சேர்ந்து பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாதிகள் முகாம்களை குறி வைத்து தாக்கி அழித்துள்ளன. இந்த துல்லிய தாக்குதலில் 80 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பலர் காயம் அடைந்தனர். இந்தியா நடத்திய பதில் தாக்குதலுக்கு ‛ஆப்ரேஷன் சிந்தூர் operation sindoor என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த பெயரை மோடியே பிரத்யேகமாக தேர்வு செய்து சூட்டிய தகவல் இப்போது வெளியாகி இருக்கிறது. சிந்தூர் என்ற பெயரை மோடி சூட்டியதற்கு 2 முக்கிய காரணங்கள் இருக்கிறதாம். திருமணமான பெண்கள் நெற்றியில் வைக்கும் குங்குமத்தை தான் சிந்தூர் என்பார்கள். பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் ஆண்களை மட்டுமே குறி வைத்து கொன்றனர். அதுவும் அவர்கள் இந்துக்கள் தானா என்பதை உறுதி செய்து சுட்டனர். கொல்லப்பட்டவர்களில் நிறைய பேர் புதிதாக திருமணமான ஆண்கள். கணவனை இழந்த பெண்களுக்கு மரியாதை செய்யும் விதமாகவே இந்த தாக்குதலுக்கு சிந்தூர் என்று மோடி பெயர் வைத்துள்ளார். இதற்கு இன்னொரு காரணமும் உண்டு. போருக்கு செல்லும் வீரர்கள், அதில் வெற்றி பெற்றால் நெற்றியில் திலகமிடுவர். அந்த வீர திலகத்தையும் சிந்தூர் என்று சொல்வார்கள். பஹல்காம் தாக்குதலுக்கு உரிய பதிலடியை கொடுத்து, நீதியை நிலை நாட்டி வென்றதால் சிந்தூர் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது என்று நிபுணர்கள் கூறினர்.