/ தினமலர் டிவி
/ பொது
/ மண்ணுள் செல்ல வேண்டியது 4 மனிதர்களுக்கு சென்றது | organ donate | organ donation
மண்ணுள் செல்ல வேண்டியது 4 மனிதர்களுக்கு சென்றது | organ donate | organ donation
சென்னை ஈக்காட்டூர் பகுதியை சேர்ந்தவர் நிக்கல்சன் வயது 26. கல்லூரி படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்தார். கடந்த 17ம் தேதி பைக் விபத்தில் சிக்கிய நிக்கல்சன் ஞாயிறன்று மூளைச்சாவு அடைந்தார். நிக்கல்சனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரின் குடும்பத்தினர் முடிவு செய்தனர். நேற்று இரவு அவரின் கிட்னி, நுரையீரல், இதயம், கல்லீரல் போன்ற உடல் உறுப்புக்கள் தேவையான மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதன் மூலம் 8 பேருக்கு புது வாழ்வு கிடைக்கும் என மருத்துவர்கள் கூறினர். இறந்தும் உயிர் வாழ போகும் நிக்கல்சனை கர ஓசை எழுப்பி நெகிழ்ச்சியாக அனுப்பி வைத்தனர்.
ஜன 21, 2025