உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தாக்குதலுக்கு உள்ளான இயக்குநரே கைதானதால் அதிர்ச்சி Oscar winning director |attacked |arrested |Israe

தாக்குதலுக்கு உள்ளான இயக்குநரே கைதானதால் அதிர்ச்சி Oscar winning director |attacked |arrested |Israe

பாலஸ்தீன மேற்கு கரை பகுதியை 1967ல் இஸ்ரேல் ஆக்கிரமித்தது. அங்கு இஸ்ரேலியர்களை குடியேற்றியும் வருகிறது. இஸ்ரேல் ஆக்கிரமித்த பகுதியில் இருக்கும் மசாபர் யட்டா(Masafer Yatta) 1980 முதல் இஸ்ரேலின் ராணுவ மண்டலமாக அறிவிக்கப்பட்டு செயல்படுகிறது. இந்த பகுதியில் இருக்கும் பாலஸ்தீனியர்கள் கட்டாயமாக வேறு இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வந்தனர். ராணுவத்தின் கட்டாயத்தால் இடம்மாறி செல்லும் ஒரு பாலஸ்தீனிய இளைஞன் குறித்த கதையை நோ அதர் லேண்ட் என்ற பெயரில் ஆவணப்படமாக எடுத்தனர். ஆஸ்கர் விருதுக்கும் இந்த ஆவணப்படம் பரிந்துரைக்கப்பட்டது. இம்மாத துவக்கத்தில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், நோ அதர் லேண்ட் படம் சிறந்த ஆவணப்படமாக விருது வென்றது. இப்படத்தின் இணை இயக்குநர் ஹம்தான் பல்லால், இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள மேற்கு கரையின் சூஸ்யா கிராமத்தில் வசிக்கிறார். நேற்று இவருடைய வீட்டை முகமூடி அணிந்த பத்துக்கும் மேற்பட்டோர் தாக்கினர். ஹம்தான் பல்லால் மீதும் தாக்குதல் நடந்ததில் அவர் காயமடைந்தார். பாலஸ்தீன மேற்கு கரை பகுதிகளில் குடியேறி வாழும் இஸ்ரேலிய மக்கள் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக நோ அதர் லேண்ட் ஆவண படத்தின் மற்றொரு இணை இயக்குநர் யுவல் ஆப்ரகாம் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து விசாரிக்க சென்ற இஸ்ரேல் ராணுவம், ஹம்தான் பல்லாவை கைது செய்து அழைத்து சென்று விசாரிக்கிறது. இஸ்ரேலியர்கள் தாக்குதல் நடத்திய போதிலும், இஸ்ரேல் ராணுவம் இணை இயக்குநர் ஹம்தான் பல்லாவை கைது செய்திருப்பது சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு கண்டனங்களும் எழுந்து வருகின்றன.

மார் 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !