உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஓட்டேரியில் பிரபல ரவுடி போலீசாரால் சுட்டு பிடிப்பு! | Chennai Police | Otteri Crime | Investigation

ஓட்டேரியில் பிரபல ரவுடி போலீசாரால் சுட்டு பிடிப்பு! | Chennai Police | Otteri Crime | Investigation

சென்னை வியாசர்பாடி பி.வி காலனியை சேர்ந்தவர் அறிவழகன், வயது 24. ஏ பிரிவு ரவுடி. இவர் மீது திமுக பகுதி செயலாளர் இடிமுரசு இளங்கோ கொலை உட்பட 10 க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. போலீசுக்கு டிமிக்கி கொடுத்து ஐந்து ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்தார். இவரை பிடிக்க புளியந்தோப்பு துணை கமிஷனர் முத்துக்குமாரின் தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வந்தனர். ஆந்திராவில் அறிவழகன் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்து அங்கு சென்ற போலீசார் அவர் மீண்டும் சென்னை திரும்பியதை கண்டுபிடித்தனர். சென்னை ஓட்டேரி பகுதியில் அவர் இருப்பதும் தெரிய வந்தது. இன்று காலை 5 மணியளவில் எஸ்ஐ பிரேம்குமார் தலைமையிலான போலீசார் ஓட்டேரி பனந்தோப்பு ரயில்வே காலனி பகுதியில் அறிவழகன் இருந்த வீட்டை சுற்றி வளைத்தனர். போலீசார் தடாலடியாக என்டர் ஆனதும் சுதாரித்த அறிவழகன் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் போலீசாரை நோக்கி சுட்டுள்ளார். நல்வாய்ப்பாக போலீசார் காயமின்றி தப்பினர். எஸ்ஐ பிரேம்குமார் அறிவழகனை காலில் சுட்டார்.

டிச 09, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி