தஞ்சை மாவட்ட நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழுவினர் ஆய்வு! Paddy Cultivation | Expert team che
தஞ்சை மாவட்டத்தில் இந்த ஆண்டு 1 லட்சத்து 99 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. அதில் 1 லட்சத்து 60 ஆயிரம் ஏக்கரில் அறுவடை முடிந்துள்ளது. தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 299 அரசு நேரடி நெல் கொள்முதல் மையங்கள் திறக்கப்பட்டன. இந்த ஆண்டு சாகுபடி அதிகரித்ததால் நெல் கொள்முதலில் தேக்கம் ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் இருப்பு வைத்திருந்த நெல் சமீபத்தில் பெய்த மழையால் பாதிக்கப்பட்டது. 17 சதவீதம் அளவுக்கு ஈரப்பதம் இருக்கும் நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்படும். ஈரப்பதம் அதற்கு மேல் இருந்தால் நிராகரிக்கப்படும். இதனால் கொள்முதல் ஈரப்பத அளவை 17 ல் இருந்து 22 சதவீதமாக உயர்த்த வேண்டுமென தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது. இதுகுறித்து ஆய்வு செய்ய மத்திய குழுவினர் தஞ்சை வந்தனர். தஞ்சை மாவட்டம் ஆலக்குடி, கீழகோவில்பத்து, ராராமுத்திரக்கோட்டை உள்ளிட்ட கொள்முதல் நிலையங்களில் பி.கே.சிங் தலைமையிலான மத்திய குழுவினர் ஆய்வு செய்து, நெல் மாதிரிகளை சோதனைக்கு எடுத்து சென்றனர். #PaddyCultivation #Thanjavur #ExpertTeam #MoistureCheck #RiceFarming #AgricultureExperts #SustainableFarming #IrrigationSystems #CropManagement #HarvestSeason #FarmLife #PaddyField #SoilMoisture #Agronomy #RiceFields #FarmTech #ThanjavurPaddy #PrecisionFarming #WaterConservation #HealthyCrops