உடனே சரி செய்யாவிட்டால் போராடுவோம் என எச்சரிக்கை | Paddy procurement centre | Paddy bundles stagnat
டெல்டா மாவட்டமான திருவாரூரில் சமீபத்தில் பெய்த கனமழையால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதில் விவசாயிகள் மிகுந்த பொருளாதார இழப்புக்கு ஆளாகினர். மழை பாதிப்பை கடந்து இப்போது மாவட்டம் முழுதும் சம்பா அறுவடை பணிகள் தீவிரமடைந்துள்ளது. இதுவரை 40 சதவிகித அறுவடை பணிகள் முடிந்துள்ளது. அறுவடையான நெல்லை விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு எடுத்து செல்கின்றனர். திருவாரூரில் மன்னார்குடி, கண்ணாரபேட்டை, பைங்காட்டூர், ஆலாச்சேரி, சவளக்காரன், பனையூர், கோட்டூர், சித்தாம்பூர் உள்ளிட்ட பல இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படுகின்றன. நெல் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது திடீரென சில தினங்களாக விவசாயிகளிடம் அறுவடை செய்யப்பட்ட நெல் கொள்முதல் செய்யாமல் , இங்கு இதுநாள்வரை கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை திருவாரூர் நெல் சேமிப்பு கிடங்கிற்கு ஏற்றி செல்லாமல் அப்படியே வைத்துள்ளனர். இதனால் போதிய இடம் இல்லாமல் கடந்த சில நாட்களாக விவசாயிகளிடம் அறுவடை செய்த நெல்லை கொள்முதல் செய்யாமல் இருக்கின்றனர்.