உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இரண்டாம் கட்டமாக 68 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கிய ஜனாதிபதி!

இரண்டாம் கட்டமாக 68 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கிய ஜனாதிபதி!

இந்தியாவில் பத்ம விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டு மத்திய அரசு 139 பேருக்கு பத்ம விருதுகளை அறிவித்தது. இதில் ஏழு பத்ம விபூஷன், 19 பத்ம பூஷன் மற்றும் 113 பத்மஸ்ரீ விருதுகள் அடங்கும். முதல்கட்டமாக 71 பிரபலங்களுக்கு பத்ம விருதுகள் சில வாரங்களுக்கு முன் வழங்கப்பட்டது. இன்று இரண்டாம் கட்டமாக 68 பேருக்கு பத்ம விருதுகளை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார். டில்லி ராஷ்டிரபதி பவனில் நடந்த இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, அமித்ஷா, ஜெய்சங்கர், துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த முறை பத்ம விருது பெற்றவர்களின் பட்டியலில் 23 பெண்கள் இடம் பெற்றிருந்தனர். முன்னாள் இந்திய தலைமை நீதிபதி ஜெகதீஷ் சிங் கேஹர், குமுத்னி ரஜினிகாந்த் லக்கியா ஆகியோருக்கு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது. நடிகை ஷோபனா, நல்லி குப்புசாமி ஆகியோர் பத்ம பூஷன் விருது பெற்றனர். தமிழகத்தை சேர்ந்த பறை இசை கலைஞர் வேலு ஆசான், புதுச்சேரி தவில் கலைஞர் தட்சிணாமூர்த்தி, திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த தெருக்கூத்து கலைஞர் புரிசை கண்ணப்ப சம்பந்தன், மிருதங்க வித்வான் குருவாயூர் துரை, இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் விஜயன் உள்ளிட்டோர் பத்மஸ்ரீ விருது பெற்றனர்.

மே 28, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை