உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / உலகிலேயே மிகப் பெரிய நடராஜர் சிலை செய்த சிற்பி | Padma Shri | Padma Awards | Natarajar statue | PM M

உலகிலேயே மிகப் பெரிய நடராஜர் சிலை செய்த சிற்பி | Padma Shri | Padma Awards | Natarajar statue | PM M

நடப்பு ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தை சேர்ந்த மூன்று பேருக்கு பத்மபூஷன் விருதும், 10 பேர் பத்மஸ்ரீ விருதுக்கும் தேர்வாகி உள்ளனர். இதில் கலைக்கான பத்மஸ்ரீ விருது சுவாமிமலையை சேர்ந்த சிற்பி ராதாகிருஷ்ணனுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. 2023ல் டில்லியில் நடந்த ஜி-20 மாநாட்டின் முகப்பு பகுதியில் பிரமாண்ட நடராஜர் சிலையை நிறுவ முடிவு செய்தனர். அந்த பணி சுவாமிமலையில் உள்ள தேவசேனாதிபதி சிற்பக்கூடத்துக்கு வழங்கப்பட்டது. ராதாகிருஷ்ணன் தலைமையில் சிலை வடிவமைக்கப்பட்டது. 28 அடி உயரம், 21 அடி அகலம், 20 டன் எடையில் செம்பு, பித்தளை, இரும்பு, ஈயம், தங்கம், வெள்ளி உள்ளிட்ட 8 உலோகங்களால் உலகிலேயே மிகப் பெரிய நடராஜர் சிலையாக உருவாகி மாநாட்டு முகப்பில் நிறுவப்பட்டது. கலைநயத்துடன் சிலையை வடிவமைத்த ராதாகிருஷ்ணன் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஜன 28, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை