உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இந்தியா பதிலடி என்ன? மோடி போட்ட மீட்டிங் kashmir pahalgam attack | pahalgam attack | PM Modi | NSA

இந்தியா பதிலடி என்ன? மோடி போட்ட மீட்டிங் kashmir pahalgam attack | pahalgam attack | PM Modi | NSA

காஷ்மீரின் பஹல்காமில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் உலக அளவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே 2 நாள் பயணமாக சவுதி சென்றிருந்த பிரதமர் மோடி, பாதியிலேயே பயணத்தை முடித்துக்கொண் அவரச அவசரமாக டில்லி புறப்பட்டார். இன்று காலை 6:40 மணிக்கு டில்லி ஏர்போர்ட் வந்தடைந்தார். தரையிறங்கியதும் ஏர்போர்ட்டிலேயே அவசர மீட்டிங்கை நடத்தினார். இதில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி மற்றும் முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர். அடுத்து என்னென்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுப்பது பற்றியும் முக்கிய ஆலோசனை மேற்கொண்டனர். தாக்குதலில் இறந்தவர்களின் சடலங்களை முறைப்படி குடும்பத்தினரிடம் ஒப்படைப்பதற்கான ஏற்பாட்டை வேகமாக மேற்கொள்ளவும் மோடி அறிவுறுத்தினார். தாக்குதல் நடத்திய ஒரு பயங்கரவாதி கூட தப்பிக்க முடியாது என்று ஏற்கனவே மோடி சூளுரைத்து இருந்தார். இதனால் அவர்களை வேட்டையாடுவதற்கான ஆப்ரேஷன் ஏற்கனவே துவங்கி விட்டது. டில்லி ஏர்போர்ட்டில் மோடி நடத்திய அவசர மீட்டிங்கில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்கவில்லை. சம்பவம் நடந்ததுமே சவுதியில் இருந்து அவரிடம் மோடி போனில் பேசினார். உடனடியாக ஸ்பாட்டுக்கு சென்று தேவையான நடவடிக்கைகளை எடுக்க அமித்ஷாவுக்கு அவர் உத்தரவிட்டார். இதனால் அமித்ஷா நேற்றே காஷ்மீர் புறப்பட்டு சென்றார். பயங்கரவாதிகளுக்கு எதிரான ஆப்ரேஷனை அவர் தீவிரமாக கண்காணித்து வருகிறார்.

ஏப் 23, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !