உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மலேசியாவில் இருந்து கிரெடிட் ஆன அமவுண்ட்! விசாரணையில் ஷாக் | NIA | TRF | Pahalgam Attack | NIA Inve

மலேசியாவில் இருந்து கிரெடிட் ஆன அமவுண்ட்! விசாரணையில் ஷாக் | NIA | TRF | Pahalgam Attack | NIA Inve

காஷ்மீரின் பஹல்காமில் ஏப்., 22ல் இந்து டூரிஸ்ட்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 பேர் இறந்தனர். ஆப்பரேஷன் சிந்துார் மூலம் நம் ராணுவம் பதிலடி கொடுத்தது. ஆரம்பத்தில் இந்த தாக்குதலுக்கு டி.ஆர்.எப்., எனப்படும் தி ரெசிஸ்டன்ஸ் பிரன்ட் பொறுப்பேற்றது. இது லஷ்கர் - இ - தொய்பாவின் துணை பயங்கரவாத அமைப்பு. பின் இதில் தங்களுக்கு தொடர்பு இல்லை என டி.ஆர்.எப் கூறியது. 2019ல் ஹிஸ்புல் முஜாக்தீன் பயங்கரவாத அமைப்புக்கு மாற்றாக உருவாக்கப்பட்டது தான் இந்த டி.ஆர்.எப்., டி.ஆர்.எப். பயங்கரவாத அமைப்புக்கு வரும் நிதி தொடர்பான விசாரணையில் என்ஐஏ இறங்கியது. ஸ்ரீநகரில் சந்தேகத்திற்கு இடமான நபரை பிடித்து அவரது போனில் உள்ள தொடர்பு எண்களை என்.ஐ.ஏ ஆராய்ந்தது. அவரது போனில் 450 காண்டக்ட்டுகள் சிக்கின. அதில் உள்ள ஒரு நபரின் வாயிலாக 9 லட்சம் வரை நிதி டி.ஆர்.எப்.,புக்கு சென்றது கண்டறியப்பட்டது. சிலர் பல பயங்கரவாத வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பதும் தெரிந்தது. என்.ஐ.ஏ விசாரணையை தீவிரப்படுத்தியது. பயங்கரவாத அமைப்புகளுக்காக திரட்டப்பட்ட நிதி மலேஷியா வழியாக ஹவாலா பணமாக மாற்றப்பட்டு டி.ஆர்.எப்.புக்கு கைமாறியது தெரிந்தது. மலேஷியாவை சேர்ந்த அகமது மிர், காஷ்மீரில் இருந்த யாசிர் ஹயாத்துடன் தொடர்பில் இருந்துள்ளார். யாசிர் அடிக்கடி மலேஷியா சென்று, மிர் மூலம் 9 லட்சம் நிதி திரட்டியிருக்கிறார். அந்த பணத்தை டி.ஆர்.எப்., பயங்கரவாத அமைப்பின் முக்கிய நபரான ஷபாத் வானியிடம் ஒப்படைத்துள்ளனர். நிதியை திரட்ட, வானியும் பல முறை மலேஷியா சென்று திரும்பிய தகவலும் கிடைத்துள்ளது. மலேஷியாவில் இருக்கும் மிர் மட்டுமின்றி, பாகிஸ்தானில் இருக்கும் இரு முக்கிய நபர்களிடமும் யாசிர் தொடர்பில் இருந்ததை என்ஐஏ அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். விசாரணை தொடர்கிறது

செப் 04, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை