உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இந்தியா அட்டாக்கில் பாக் துவம்சம்: அமெரிக்க பத்திரிகைகள் ஆய்வு கட்டுரைIndia Pak War|Washington Post

இந்தியா அட்டாக்கில் பாக் துவம்சம்: அமெரிக்க பத்திரிகைகள் ஆய்வு கட்டுரைIndia Pak War|Washington Post

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியப்படைகள் தாக்குதல் நடத்தின. பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பாக்., ராணுவம் நம் மீது தாக்குதல் நடத்தியதால், இந்திய விமானப்படை மீண்டும் பதிலடி கொடுத்தது. பாக்., விமானப்படை தளங்களை குறிவைத்து தகர்க்கப்பட்டன. இந்திய படைகளின் தாக்குதலை சமாளிக்க முடியாத பாக்., சண்டை நிறுத்த உடன்பாட்டிற்கு அழைப்பு விடுத்தது. இந்தியா அதை ஏற்ற பின், சண்டையில் நாங்கள் தான் வெற்றி பெற்றோம் என பாக்., மார்தட்டி வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் மற்றும் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைகள் பாகிஸ்தானில் இந்திய படைகள் நடத்திய தாக்குதல் குறித்து சாட்டிலைட் படங்களின் அடிப்படையில் ஆய்வு செய்து கட்டுரை வெளியிட்டுள்ளன. அதில் கூறியிருப்பதாவது: லண்டனின் கிங்ஸ் கல்லுாரியை சேர்ந்த சர்வதேச உறவுகள் துறை பேராசிரியர் வாட்டர் லாட்விங் கூற்றுப்படி, பாகிஸ்தானில் இந்திய படையின் தாக்குதல்கள் மிகப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. 1971ம் ஆண்டுக்கு பின் இந்திய படைகள் சார்பில் பாகிஸ்தானில் நடத்தப்பட்ட பெரிய தாக்குதல் இதுவாகும். பாகிஸ்தானுக்குள் 100 மைல் துாரம் புகுந்து இந்திய படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன. இதில், முக்கிய விமான ஓடுதளங்கள், இணைப்பு பாலங்கள் உள்ளிட்டவை முற்றிலும் நாசப்படுத்தப்பட்டுள்ளன.

மே 15, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை