/ தினமலர் டிவி
/ பொது
/ ராணுவ ரகசியங்கள் கசிந்ததா? விசாரணை தீவிரம் | Honey-Trap | Air Force | Wing Commander
ராணுவ ரகசியங்கள் கசிந்ததா? விசாரணை தீவிரம் | Honey-Trap | Air Force | Wing Commander
விமான படையில் விங் கமாண்டராக இருந்த 44 வயது நபரை சோசியல் மீடியாவில் ஒரு பெண் தொடர்பு கொண்டார். நண்பராக அறிமுகமாகி பின் நெருக்கமாக பழகி உள்ளார். இருவரும் வாட்ஸாப்பில் பேசி வந்துள்ளனர். காதலிக்கிறேன், திருமணம் செய்து கொள்ளலாம் என ஆசை வார்த்தை கூறி உள்ளார். ஹனி டிராப் வலையில் விழுந்த அதிகாரி, ராணுவம் சார்ந்த முக்கிய தகவல்கள் மற்றும் ஆவணங்களை அனுப்பியதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் இவரது நடவடிக்கையில் சந்தேகம் வர விமான படை உயரதிகாரிகள் விசாரித்தனர். ராணுவ ரகசியங்களை கசியவிட்டது தெரிந்தது. பாக்., உளவுத்துறை அதிகாரிகளுடன் அப்பெண் தொடர்பில் இருப்பதையும் கண்டுபிடித்தனர்.
ஆக 09, 2026