ெண்களை சீண்டும் பாக் ராணுவம்: ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அராஜகம்
பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பொருளாதார வீழ்ச்சி, ஆக்கிரமிப்பு காஷ்மீரை கடுமையாக பாதித்துள்ளது. அதுமட்டுமின்றி, அரசியல் ரீதியாக தாங்கள் ஒதுக்கப்படுவதாக கூறி, அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர். ராவலகோட் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தியதில், 58க்கும் மேற்பட்டோர் இறந்தனர். இதை தொடர்ந்து, ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உரிமைகளை மீட்டெடுக்கக் கோரி அவாமி அதிரடி குழு போராடி வருகிறது. கடையடைப்பு, போக்குவரத்து முடக்கம் உள்ளிட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இந்த நிலையில், போராட்டத்தில் பங்கேற்க வீட்டை விட்டு வெளியே வர முயன்ற பெண்களை பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்தி, முரட்டுத்தனமாக தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும், வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து, அங்கிருந்த பெண்களை அவமதித்ததுடன், தங்கம் மற்றும் மின்னணு பொருட்களை ராணுவத்தினர் கொள்ளையடித்து செல்லும் சம்பவம் அரங்கேறி வருகிறது. #Pakistan #PakistanOccupiedKashmir #Kashmir #KashmirNews #BreakingNews #LatestNews #WorldNews #InternationalNews #NewsUpdate #GlobalNews #PakistanCrisis #EconomicCrisis #PoliticalCrisis #Protest #PeopleProtest