2வது முறையாக சரியான நேரத்தில் இந்தியா செய்த உதவி | Pakistan | Pakistan Flood | India | Embassy in Pa
காஷ்மீர் பஹல்காம் தாக்குதலுக்குப் பின் ஆப்பரேஷன் சிந்துார் மூலம் நம் படைகள் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தன. சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்தது. இரு நாடுகளுக்கும் பேச்சுவார்த்தை நின்றது. இந்த சூழலில் பாகிஸ்தானில் ஜூன் முதல் பருவ மழை பெய்து வருகிறது. வெள்ளத்திற்கு இதுவரை 800க்கும் அதிகமானோர் இறந்தனர். 7,000க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்துள்ளன. ஏற்கனவே தாவி நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது தொடர்பாக, பாகிஸ்தானுக்கு சமீபத்தில் சரியான நேரத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. சில நாட்களாக ஜம்மு காஷ்மீரில் ஓடும் ராவி உள்ளிட்ட அனைத்து ஆறுகளிலும் கனமழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த ஆறுகளில் பெரும்பாலானவை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் வழியாக கடலில் சேர்கிறது. மனிதாபிமான நடவடிக்கையாக மத்திய அரசு, பாகிஸ்தானில் உள்ள இந்திய துாதரகம் மூலம் பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தனர். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் பஹவல்பூர், கசூர் ஆகிய பகுதிகளிலிருந்து 1 லட்சத்துக்கும் மேற்பட்டோரை, அந்நாட்டின் பேரிடர் மீட்பு படையினர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றினர். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் நரோவால் என்ற பகுதியில் உள்ள கர்தார்பூர் குருத்வாரா சீக்கியர்களின் முக்கிய குருத்வாராக்களில் ஒன்று. இது ராவி ஆற்றின் வெள்ள நீரில் மூழ்கியது. அங்கு 100க்கும் அதிகமானோர் சிக்கித் தவிக்கின்றனர். அவர்களில் இந்தியர்கள் உள்ளனரா என்ற தகவல் இல்லை. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடக்கிறது. #Pakistan | #PakistanFlood | #India | #EmbassyinPakistan | #IndiaHelps | #HeavyRain