உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சிந்தூர் தாக்குதலில் பாகிஸ்தான் விமானப்படை தளம் சேதம் | Pakistan FM accepts |Operation Sindoor

சிந்தூர் தாக்குதலில் பாகிஸ்தான் விமானப்படை தளம் சேதம் | Pakistan FM accepts |Operation Sindoor

காஷ்மீரின் பஹல்காமில் சென்ற ஏப்ரல் 22ல் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் டூரிஸ்ட்கள் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் மூலம் தக்க பதிலடி கொடுத்தது. பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் தரைமட்டமாக்கப்பட்டன. மே10ல் பாகிஸ்தானின் நூர் கான் விமானப்படை தளத்தை இந்தியா தாக்கியது. இந்த தாக்குதல் பாகிஸ்தானுக்கு கிலியை ஏற்படுத்தியது. ஆனால் அதிகார பூர்வ தகவல் அங்கிருந்து வெளியாகவில்லை. செயற்கைக்கோள் புகைப்படம் பாகிஸ்தானின் சேதங்களை தெளிவாக காட்சிப்படுத்தியிருந்தது. ஆனாலும் அவர்கள் இதை அப்போது மறுத்தனர். ஆனால் இன்று பேட்டியளித்த பாக்., வெளியுறவுத்துறை அமைச்சர் இஷார் தார் லேசான சேதம் என மழுப்பியிருக்கிறார். அவர் கூறியதாவது: ராவல்பிண்டியில் உள்ள நூர் கான் விமான தளத்தை இந்தியா குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இந்தியா பாகிஸ்தானை நோக்கி ட்ரோன்களை ஏவியது. 36 மணி நேரத்தில் 80 ஆளில்லா டிரோன்கள் அனுப்பப்பட்டன. 79 டிரோன்களை நாங்கள் இடைமறித்து, தடுத்தோம்.

டிச 28, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி