ரயில் HIJACK-ல் பாக் மூடி மறைத்த உண்மை pakistan train hijack | BLA train hijack PAK vs BLA | baloch
பாகிஸ்தானில் உள்ள பலூசிஸ்தான் மாகாணம் பாலோன் மாவட்டத்தில் பலூசிஸ்தான் விடுதலை ராணுவம் என்னும் பிஎல்ஏ கிளர்ச்சி படையினர் 430 பயணிகளுடன் ரயிலை கடத்திய சம்பவம் மொத்த உலகத்தையும் அதிர வைத்தது. பலூசிஸ்தானின் குவெட்டா நகரில் இருந்து பெஷாவர் நகருக்கு சென்ற ரயிலை மலைக்குன்றுகள் நடுவே குண்டு வீசி தடம் புரள செய்தனர். பின்னர் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தி மொத்த ரயிலை HIJACK செய்தனர். துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டனர். பெண்கள், குழந்தைகள், பலூசிஸ்தான் மக்கள் என பாதி பயணிகளை விடுவித்த பிஎல்ஏ, மற்ற பாதி பேரை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துக்கொண்டது. அந்த ரயிலில் அதிகளவில் ராணுவ வீரர்கள் சென்றனர். அவர்களை குறி வைத்து தான் HIJACK நடந்ததாக பிஎல்ஏ சொன்னது. பலூசிஸ்தான் மாகாணத்தை பாகிஸ்தானில் இருந்து பிரித்து தனி நாடாக உருவாக்க வேண்டும் என்பது பிஎல்ஏ கிளர்ச்சி படையின் நோக்கம். இதற்காக 20 ஆண்டுகளாக ஆயுதம் ஏந்தி பாகிஸ்தான் அரசுக்கு எதிராகவும் ராணுவத்துக்கு எதிராகவும் பயங்கர தாக்குதலை நடத்தி வருகின்றனர். அதிலும் கடைசி 2 வருடமாக உச்சக்கட்ட சண்டை நடக்கிறது. இதன் தொடர்ச்சி தான் இப்போது ரயில் HIJACK சம்பவம். இதற்கிடையே ஸ்பாட்டுக்கு போன பாகிஸ்தான் ராணுவம் பிஎல்ஏ பயங்கரவாதிகளுடன் சண்டை செய்தது. உடனே பிஎல்ஏ பயங்கரவாதிகள் ஒரு கெடு விதித்தனர்.