பாகிஸ்தானியர்களுக்கு விசா தர பல நாடுகள் மறுப்பு! Pakistan | Economic Crisis | Beggars
நம் அண்டை நாடான பாகிஸ்தான், கடும் நிதி நெருக்கடியில் உள்ளது. இதில் இருந்து மீள்வதற்காக, ஐ.எம்.எப். எனப்படும் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் வாங்கியுள்ளது. ஏற்கனவே இரண்டு தவணைகள் வழங்கியுள்ள நிலையில், அடுத்தகட்ட தவணைக்கு, ஐ.எம்.எப். பல நிபந்தனைகளை விதித்துள்ளது. இதன் வாயிலாக, பாகிஸ்தானில் மின்சாரம், சமையல் கேஸ் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், விவசாயத்துக்கான வரியும் அதிகரிக்கும். ஒரு பக்கம் பயங்கரவாத அமைப்புகளை வளர்த்து, ஊக்குவித்து, பாதுகாப்பு அளிப்பதாக, பாகிஸ்தான் மீது கடும் குற்றச்சாட்டு உள்ளது. மறுபக்கம், அந்த நாட்டின் மொத்த மக்கள் தொகையில், 10 சதவீதம் பேர் பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.