பாக் மனித குண்டு தாக்குதல்: இந்தியா மீது பழிபோட்ட பாக் | Pakistan blames india for bomb blast
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள கதீஜாதுல் குப்ரா மசூதியில் நேற்று 400க்கும் அதிகமானோர் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மசூதியில் குண்டு வெடித்தது. இதில் 70 பேர் உடல் சிதறி பலியாகினர். 169 பேர் படுகாயமடைந்தனர். இது மனித வெடிகுண்டு தாக்குதல் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. தொழுகை நடந்துகொண்டிருந்தபோது மசூதிக்குள் மர்ம ஆசாமி ஒருவன் நுழைய முயன்றுள்ளான். அவனை அங்கிருந்த பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தி உள்ளனர். உடனே அவன் உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்க செய்துள்ளான் என போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவத்திற்கு உடனடியாக எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில், இந்த சம்பவத்தின் பின்னால் இந்தியா இருப்பதாக பாகிஸ்தான் பழி சுமத்தியது.