பாகிஸ்தான் 2 துண்டாக உடையும் பகீர் BLA Baloch Liberation Army | Ind vs PAK | balochistan vs pakistan
பாகிஸ்தான் சீக்கிரமே இரண்டு துண்டாக உடையப் போகிறதா....? உலக அரசியலில் ஹாட் டாபிக்களில் ஒன்றாக இப்போது இந்த விஷயம் பேசப்பட்டு வருகிறது. இதற்கு முக்கிய காரணம் பாகிஸ்தான் எம்பி மவுலானா ஃபஸ்ல்-உர்-ரஹ்மான். சீக்கிரமே பாகிஸ்தான் இரண்டு துண்டாக உடையப்போகிறது என்று இவர் தான் பரபரப்பை பற்ற வைத்துள்ளார். ஏதோ அரசியல் மேடையில் பேசவில்லை. மாறாக பாகிஸ்தான் நாட்டின் பார்லிமென்ட்டாக விளங்கும் தேசிய சட்டசபையில் பேசி பூகம்பத்தை உண்டு பண்ணி இருக்கிறார். எப்படி 1971ல் இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் வெடித்து, பாகிஸ்தான் இரண்டு துண்டாகி புதிதாக வங்கதேசம் என்ற நாடு உருவானதோ அதே போல் மீண்டும் பாகிஸ்தான் இரண்டு துண்டாக போகிறது. இந்த முறை பாகிஸ்தானில் உள்ள மிகப்பெரிய மாகாணமான பலூசிஸ்தான் உடையும். பலூசிஸ்தானில் உள்ள ஐந்தாறு, மாவட்டங்கள் பாகிஸ்தானில் இருந்து விடுதலை பெறுவதாக அறிவித்தால் அதை ஐநா சபையே அங்கீகரித்து விடும். பிறகு பாகிஸ்தான் டோட்டலாக வீழ்ந்து போகும். இதற்கு பாகிஸ்தான் அரசு தான் காரணமாக இருக்கும் என்று பாகிஸ்தான் பார்லியை பரபரக்க வைத்தார் மவுலானா. பாகிஸ்தான் உடைந்து வங்கதேசம் வந்தது போல், இன்னொரு முறை பாகிஸ்தான் உடைந்து பலூசிஸ்தான் நாடு உருவாகும் என்று மவுலானா சொன்னதற்கு பின்னால் பல உண்மை காரணங்கள் இருக்கின்றன. அந்த காரணங்கள் என்னென்ன? பலூசிஸ்தானில் அப்படி என்ன நடக்கிறது? மவுலானா சொன்னது போல் உண்மையிலேயே பலூசிஸ்தான் உடைந்தால் பாகிஸ்தான் என்ன ஆகும் என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம். பாகிஸ்தானில் பலூசிஸ்தான், ஹைபர் பக்துன்க்வா, பஞ்சாப், சிந்து ஆகிய 4 மாகாணங்கள் உள்ளன. இதில் பலூசிஸ்தான் தனித்துவமானது. பாகிஸ்தானில் உள்ள மிகப்பெரிய மாகாணம் இது. நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 43 சதவீதம் இங்கே இருக்கிறது. நாட்டின் தென் மேற்கு பகுதியில் அமைந்துள்ள இந்த மாகாணம், ஒரு பகுதி எல்லையை ஆப்கானிஸ்தானுடன் பகிர்கிறது. இன்னொரு பகுதியை ஈரான் நாட்டுடன் பகிர்கிறது. மற்றொரு பகுதியில் கடல் உள்ளது.