நாலாபுறமும் சுற்றிவளைக்கப்படும் பாகிஸ்தான் | BLA | India | Pakistan
காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா எந்தவகையில் எதிர்வினையாற்றப்போகிறது என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்தியாவின் பதிலடி எப்படி இருக்கும் என்று இப்போது வரை யாராலும் கணிக்க முடியவில்லை. அது சர்ஜிக்கல் ஸ்டிரைக் முறையில் இருக்குமா? இல்லை பாகிஸ்தான் மீது நேரடி தாக்குதலாக இருக்குமா? என்ற சந்தேகம் நீடிக்கிறது. பயங்கரவாதிகளின் புகளிடமாக உள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியா கைப்பற்றக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. பெரிய அளவில் போர் பதற்றம் வந்தால் அது இரு நாட்டு மக்களுக்கும் தான் பாதிப்பு. சூழலை சாமர்த்தியமாக கையாள வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது.
மே 03, 2025