உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் போல ஊடுருவும் பயங்கரவாதிகள் | Pakistani terrorists | NIA raids

தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் போல ஊடுருவும் பயங்கரவாதிகள் | Pakistani terrorists | NIA raids

செங்கல்பட்டு மாவட்டத்தில் பதுங்கியிருந்த, பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த அஹலதுர் முகமது என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் பறிமுதல் செய்த ஆவணங்கள் அடிப்படையில், ஜம்மு - காஷ்மீர் மற்றும் தமிழகம், பீஹார் உட்பட ஐந்து மாநிலங்களில், 21 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, மொபைல் போன்கள், லேப்டாப் உள்ளிட்ட டிஜிட்டல் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதனை ஆய்வு செய்தபோது, பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்களை குறி வைத்து, பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மூளைச்சலவை செய்வது தெரிய வந்துள்ளது. பீஹார் இளைஞர்களும், சிரியாவில் உள்ள ஐ.எஸ்., மற்றும் அல் குவைதா அமைப்புகளைச் சேர்ந்த பயங்கரவாதிகளும், சமூக வலைதளங்கள் மூலம் தொடர்பில் இருந்தது உறுதி செய்யப்பட்டு உள்ளது. பாகிஸ்தானை தலைமை இடமாக வைத்து, ஜெய்ஷ் - இ - முகமது என்ற பயங்கரவாத அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள், நேபாளம் வழியாக பீஹாருக்குள் ஊடுருவி, அங்குள்ள முஸ்லிம் இளைஞர்களை தங்கள் அமைப்பில் சேர்த்து வருவதும் தெரிய வந்துள்ளது. பயங்கரவாதிகளின் பிடியில் உள்ள இளைஞர்கள், தினக்கூலி தொழிலாளிகள் போல தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். இதனால், நாடு முழுதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க, போலீசார் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

செப் 12, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

M Ramachandran
செப் 12, 2025 10:56

இவங்கள் திருந்திர ஜாதியில்லை. பாக்கிஸ்தானிலுள்ள ராணுவத்தையும் அதை சார்ந்த கும்பலையும் சுத்தமா அடுத்த சண்டையின் போது சுத்தமா அழிக்க வேண்டிய நிர்பந்ததை அவர்கள் ஏற்படுத்துகிறார்கள். ராணுவ தீவிர குணமுடையவர்களை அமெரிக்கா மாதிரி காணாமப்போக செய்ய வேண்டும்.


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி