வாசகர்கள் கருத்துகள் ( 1 )
தமிழக அரசும் காவல்துறையும் இதில் அரசியல் பார்க்காமல் தீவிரவாதிகளை பிடித்து மத்திய உளவு துறையிடம் ஒப்படைத்து விடுவது நல்லது.இல்லையென்றால் அவர்களை விடுவிக்க இஙகுள்ள அந்த மதத்தை சேர்ந்தவர்கள் அழுத்தம் கொடுப்பார்கள்.
தமிழகத்தில் இறங்கிய பாக் உளவாளிகள்: NIA விசாரணையில் பகீர் | Ameer Subair Siddique | Pakistani spy
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தைச் சேர்ந்தவர் தமீம் அன்சாரி. கடந்த 2012ல் கியூ பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவர் பாகிஸ்தான் உளவாளியாகச் செயல்பட்டு வந்தது உறுதியானது. இதே போல 2014ல் சென்னை மண்ணடியில் பதுங்கியிருந்த பாகிஸ்தான் உளவாளி ஜாகீர் உசேன், சிவபாலன்,சலீம்,ரபீக் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஜாகீர் உசேன் அளித்த வாக்குமூலத்தின்படி, அதே ஆண்டில், சென்னை சாலிகிராமத்தில் வசித்து வந்த அருண் செல்வராஜ் என்பவரும், கியூ பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். அதன்பின் இவர்கள், என்.ஐ.ஏ., எனும் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். தொடர் விசாரணையில், ஜாகீர் உசேன், அருண் செல்வராஜ் ஆகியோர் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. அருண் செல்வராஜ், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் நிறுவனம் நடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதன் மூலமாக தமிழ் சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகளின் நட்பு வட்டத்தில் அவர் இணைந்தார். அவரது மொபைல் போன், லேப்டாப் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தபோது, என்.ஐ.ஏ., அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். அவற்றில், சென்னையில் உள்ள அமெரிக்க துாதரகம், பெங்களூரில் உள்ள இஸ்ரேல் துாதரகம், சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ பயிற்சி மையம், கல்பாக்கம் அணு மின் நிலையம், ஆந்திராவில் விசாகப்பட்டினம், கொச்சி கப்பல் கட்டும் துறைமுகம் உள்ளிட்ட பல இடங்களின் படங்கள், வீடியோக்கள் இருந்தன.
தமிழக அரசும் காவல்துறையும் இதில் அரசியல் பார்க்காமல் தீவிரவாதிகளை பிடித்து மத்திய உளவு துறையிடம் ஒப்படைத்து விடுவது நல்லது.இல்லையென்றால் அவர்களை விடுவிக்க இஙகுள்ள அந்த மதத்தை சேர்ந்தவர்கள் அழுத்தம் கொடுப்பார்கள்.